அமைச்சரவையில் உதயநிதிக்கு மூன்றாவது இடம்!

Published On:

| By Selvam

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

மேலும், அமைச்சர்கள் பொன்முடி, ராஜ கண்ணப்பன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், தங்கம் தென்னரசு, மெய்யநாதன் ஆகியோரது இலாகாக்கள் மாற்றப்பட்டது.

புதிய அமைச்சர்கள் நேற்று (செப்டம்பர் 29) ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர். இந்தசூழலில், அமைச்சரவை ரேங்க் பட்டியலில் உதயநிதிக்கு மூன்றாவது இடம் வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், புதிய அமைச்சரவை பட்டியல் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலாவது இடத்தில் முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மூன்றாவது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு 19-ஆவது இடமும், செந்தில் பாலாஜி 21, கோவி.செழியன் 27, ஆவடி நாசர் 29-ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம் : தேவரா!

இவங்க அலப்பறை தாங்க முடியல… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share