VIDEO: கிளாம்பாக்கத்தில் அமைச்சர் செய்த ‘சம்பவம்’.. பொதுமக்கள் ‘டென்ஷன்’.. அதிமுக கண்டனம்.. என்ன நடந்தது?

By Mathi

|

Published on 28 May 2026, 12:12 PM

Kilambakkam Transport Minister

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் (Kilambakkam) நேற்று பயணிகளுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பயணிகளிடம் நடந்து கொண்ட செயலுக்கு அண்ணா திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் சோசியல் மீடியா பக்கத்தில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு.

ADVERTISEMENT

ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார்.

இல்ல புரியல…. “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது?

ADVERTISEMENT

GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்” என கண்டனம் தெரிவித்துள்ளது.

வீடியோ:

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel