அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று (ஜூன் 11) விடுவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது தொகுதியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேசமயம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக திண்டிவனம், ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த ப.சேகர், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…