“முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி” – அமைச்சர் சேகர்பாபு

Published On:

| By Selvam

பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஆகஸ்ட் 25) தெரிவித்துள்ளார்.

பழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு செயல்களை செய்வதற்கு ஸ்டாலின் ஊக்கமளித்தார். ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம்.

அந்தவகையில், நேற்று தொடங்கப்பட்ட மாநாடு மாபெரும் வெற்றியடைந்ததை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று மட்டும் 600 கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், கந்தசஷ்டி கவசம், இவைகள் எல்லாம் புதுமையான தோற்றத்துடன் நடைபெற்றது. நான்கு நீதிபதிகள், தமிழ் கூறும்  ஆதினங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

ஜப்பான், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, மலேசியா போன்ற மேலைநாடுகளில் இருந்து மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். மாநாட்டை தொடங்கி வைத்தபோது எல்லோருக்கும் எல்லாம் என்று ஸ்டாலின் பேசினார். அந்தவகையில், இந்த மாநாடு சிறப்படைந்துள்ளது.

இந்த மாநாட்டில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் கூடியது, அனைத்து தரப்பு மக்களும் இந்த மாநாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

50 ஆயிரம் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் , காலை, மதியம், இரவு வேளையில் 1.15 லட்சம் பக்தர்கள் உணவு அருந்தியிருக்கிறார்கள். பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஐந்து நாட்கள் கண்காட்சி நீட்டிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து மத அடிப்படையில் விழாக்கள் ஏற்பாடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, “இது முழுக்க முழுக்க அரசியல் சார்பற்ற மாநாடாகும்” என்று தெரிவித்தார்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல்  திண்ணை: ரஜினி போட்ட குண்டு… ஸ்டாலின் சொன்ன பதில்!  வெடிக்கும் துரைமுருகன்-  திமுகவில் சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

மின்னம்பலம் செய்தி எதிரொலி… திருமாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share