தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை உயர்வு, ஊடகவியல் கல்வி நிறுவனம்: சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்புகள்!

Published On:

| By Kavi

Minister Saminathan announcements

தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 16)  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு பதிலுரை அளித்த அமைச்சர் சாமிநாதன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Minister Saminathan announcements

அதில், 

தமிழ் வளர்ச்சித் துறை Minister Saminathan announcements

தமிழறிஞர்களுக்கு ரூ.4,500-லிருந்து ரூ.7,500-ஆகவும்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500-லிருந்து ரூ.7,500 -ஆகவும்
எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.7,500-ஆகவும் உதவித் தொகை  உயர்த்தி வழங்கப்படும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும்.

தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயல்பட வைப்புத் தொகை வழங்கப்படும்.

தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும்.

சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலத்தில் அமைந்துள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும்.

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்குக் கலையரங்கு அருகில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்.

சங்க காலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.

கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம், மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ சிறப்புப்பொழிவு நடத்தப்படும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.2,000- வீதம் வழங்கப்படும். 

செய்தி மற்றும் விளம்பரத் துறை Minister Saminathan announcements

சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற  தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

இசை முரசு நாகூர் இ.எம்.அனிபாவின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

வேலூர் அண்ணா கலையரங்கம்  5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் “கலைஞர் திரைக் கருவூலம்” எனக் கலைக் கூடம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் கல்வியினை குறைந்த கட்டணத்தில் வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies ) இந்தக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் (CCTV) பொருத்தப்படும். மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்களில் ரூபாய் 2.50 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசின் திட்டங்கள், சாதனைகள் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் 10 மாவட்டங்களில் மின்சுவர்கள் (Digital Wall) அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள 28 மாவட்டங்களிலும் மின்சுவர்கள் (Digital Wall) அமைக்கப்படும்.

அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் உடனுக்குடன் செய்திகளை விரைந்து அனுப்பிட ஏதுவாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளுக்கு நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள Wi-Fi வசதிகள் ஏற்படுத்தப்படும்.

எழுதுபொருள் மற்றும் அச்சு Minister Saminathan announcements

அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சகங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அச்சுத்துறையில் அதிநவீன அச்சு தொழில்நுட்பங்கள் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அச்சுப் பணிகள் மேம்படுத்தப்படும்.

அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சகங்களில் அச்சு மற்றும் அனுப்புகைப் பணிகள் ERP for Printing Industry எனும் மென்பொருளை பயன்படுத்தி செம்மையாக்கப்படும்.

அரசிதழில் பெயர் திருத்தம் / பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வண்ணம் இணைய வழியில் மேற்கொள்ளப்படும்.

சென்னை அரசு மைய அச்சகத்திற்கு Double Wire Binding Machine With Calendar Hanger Device, Hydraulic Punching Machine ஆகியவை கொள்முதல் செய்யப்படும்.

சென்னை அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் விருத்தாசலம் அலகுகளுக்கு நியூமேடிக் தண்டுகள் (Pneumatic Shaft) 20 எண்ணிக்கைகள் கொள்முதல் செய்யப்படும்.

சென்னை அரசு மைய அச்சகத்திற்கு Variable Data Printer (VDP) & Drop on Demand (DOD) Piezo Inkjet System CSPL 34 AE Print Head கொள்முதல் செய்யப்படும். Minister Saminathan announcements

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share