செந்தில் பாலாஜிக்கு பதில் ரகுபதி… சட்டமன்றத்தில் நடந்த சம்பவம்!

Published On:

| By Selvam

Minister Ragupathi passed amendment

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை, சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 26) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். Minister Ragupathi passed amendment

சட்டமன்றத்தில் இன்று சுற்றுச்சூழல், காலநிலைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளிச்சந்தை குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டுவரக்கூடிய சட்டமுன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

ஆனால், அச்சடிக்கப்பட்ட அந்த சட்டத் திருத்த மசோதா நகலில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்வார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

சட்டமன்றத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டமுன்வடிவு மசோதாக்களை, துறை சார்ந்த அமைச்சர்கள் அல்லாமல் வேறு அமைச்சர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆனால், செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் விடுதலை வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கெடு விதித்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Minister Ragupathi passed amendment

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share