பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓட்டேரி பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிகால விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புமீறி செயல்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.
ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆர்.என்.ரவி. அவரது இந்த செயல்பாடுகளுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் முடிவு கட்டப்படும்.
தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பொன்முடியின் பதவியேற்பு விழா நடத்தப்படும்.
மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!
’பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ நாளை நிறைவு : ஸ்டாலின் பங்கேற்பு!