உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் பலி… விசாரணைக்கு உறுதியளித்த அமைச்சர்

Published On:

| By christopher

உடல் எடையை குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி திருவள்ளுவர் நகரில் உள்ள புதுபாளையம் வீதி தெருவை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர்களில் பி.எஸ்சி, ஐ.டி. முடித்துள்ள ஹேமசந்திரன், டிசைனிங் பணி செய்து வந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

ADVERTISEMENT

இதில் உடல் பருமனால் அவதிப்பட்ட ஹேமச்சந்திரன், சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அறுவை சிகிச்சை வாயிலாக கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் ‘கார்டியாக் அரெஸ்ட்’ காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து, ஹேமச்சந்திரன் தந்தை செல்வநாதன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாகவும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த ஹேமச்சந்திரனின் உறவினர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், உடல் பருமன் சிகிச்சையில் இளைஞரின் உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது விசாரணைக்குழு அமைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

3வது முறையாக விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி… சாதனை படைக்க வாய்ப்பு!

தங்கைக்கு டி.வி வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணனுக்கு மனைவியால் ஏற்பட்ட கொடூரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share