உதயநிதி எம்.எல்.ஏ, அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளான நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி, தனது தாத்தாவும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ ஆன போதும் அவர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
தொகுதியில் எந்த அளவுக்கு உதயநிதி ஈடுபாடு காட்டினாரோ அதே அளவுக்கு சினிமாவிலும் ஈடுபாடு காட்டி வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளில், கட்சி வேலை இருக்கிறது, தொகுதிக்குச் செல்ல வேண்டும். நடித்துக் கொண்டிருந்தால் இதையெல்லாம் கவனிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

எனவே, அவர் விரைவில் அரசியலில் முழு கவனம் செலுத்தவுள்ளார். இந்நிலையில், சென்னையில் இன்று (நவம்பர் 26) சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு திட்டத்தை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது ‘நாளை உங்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறதே, பிறந்தநாள் என்பதால் அமைச்சராகும் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “அது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்” என்றார்.
பிரியா
“தவறு செய்தால் காப்பாற்றமாட்டோம்”: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்!