அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

Published On:

| By Selvam

minister ponmudi in ed office

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 30) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

2006-2011 திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி பொன்முடி, கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கியது.

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. இந்தசூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தெலங்கானாவில் தேசிய கட்சிகள் வலுவாக இல்லை: கவிதா

வேளாண் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள்!

IPL2024: மார்ச்சில் தொடக்கம்… முதல் போட்டியில் மோதப்போறது யாருன்னு பாருங்க

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share