சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு : அமைச்சர் பெரியகருப்பன் நிம்மதி பெருமூச்சு!

By Kavi

|

Published on 27 Nov 2025, 7:03 PM

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பெரியகருப்பன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 வரை திமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். தற்போது கூட்டுறவு துறை அமைச்சராக உள்ளார்.

ADVERTISEMENT

இவர் 2006 -2011 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக  1.20 கோடி ரூபாய் சொத்து செய்ததாக 2012 ஆம் ஆண்டு பெரியகருப்பன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர். 

ADVERTISEMENT

இந்த வழக்கு சிவகங்கை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று (நவம்பர் 27)நீதிபதி அறிவொளி தீர்ப்பு வழங்கினார். 

ADVERTISEMENT

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி  குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இன்றைய தினம் தீர்ப்பு வருவதையொட்டி தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் பெரியகருப்பன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel