திமுக தடையாக இருந்ததா?: அமித் ஷாவுக்கு மூர்த்தி பதில்!

Published On:

| By Monisha

minister moorthi about amit shah

திமுக மீதான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிழக்குச் சட்டமன்றத் தொகுதியில் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மூர்த்தி தனது சொந்த செலவில் மிதிவண்டியை பரிசளித்து ஊக்கப்படுத்தினர்.

ADVERTISEMENT
minister moorthi about amit shah critizise dmk in vellore tamilnadu

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகள் பெற்றோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய பிரதமராக அடுத்து தமிழர் வர வேண்டுமென கூறியதை திமுகவினர் ஸ்டாலின் தான் அது என கூறி வருகின்றனர். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு ஒரு நிமிடம் யோசித்து பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ”நீங்கள் என்ன கூறவேண்டுமென நினைக்கிறீர்களோ அதையே எழுதிக் கொள்ளுங்கள்” என கூறினார்.

பல தலைவர்கள் பிரதமர் ஆகுவதை தடுத்தது திமுகதான் என அமித் ஷா சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு,

ADVERTISEMENT

”எப்போது, எதை திமுக தடுத்தது. பல ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்கியவர் உருவாகக் காரணமானவர் முன்னாள் முதல்வர் கலைஞர் என்பது நாடே அறிந்த உண்மை. அவர் உருவாக்குவதில்தான் முதல்வராக இருந்தார்.

தற்போது இருக்கக் கூடிய முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்” எனக் கூறினார்.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்: சி.வி.கணேசன்

அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு திட்டமிட்டதா?: செந்தில்பாலாஜி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share