தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்!

Published On:

| By christopher

minister kssr ramachandran grandson attack

திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் மற்றும் பேரன் மீது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. minister kssr ramachandran grandson attack

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ளவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

ADVERTISEMENT

இவரது மகன் ரமேஷும், அமைச்சரின் பேரன் கதிரும் நேற்று (நவம்பர் 10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் இரவு காட்சியை பார்க்க சென்றுள்ளனர்.

திரையரங்கின் உள்ளே இவர்கள் இருவருக்கும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்கள், திருநங்கைகள் உட்பட 6 பேர் கொண்ட மர்ம கும்பல் படத்திற்கு நடுவே அதிக சத்தம் எழுப்பி விசில் அடித்துக்கொண்டும், அசிங்கமான வார்த்தைகளை பேசிக்கொண்டும் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனை அமைச்சர் மகன் ரமேஷ் மற்றும் அங்கிருந்த சக பார்வையாளர்கள் தட்டிக்கேட்ட நிலையில், தகராறு ஏற்பட்டது.

மேலும் அந்த 6 பேர் கொண்ட கும்பல் அமைச்சர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரையரங்கின் அவசர வாயில் வழியாக தப்பிச்சென்று உள்ளனர்.

ADVERTISEMENT

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அமைச்சரின் பேரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினார்.

இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அமைச்சரின் மகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திரையரங்கு மற்றும் மற்றும் அதன் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து  தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அமைச்சரின் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு கேபினட்டில் மூத்த அமைச்சராக உள்ள ஒருவரது குடும்பத்தினர் மீது பொது இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. minister kssr ramachandran grandson attack

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரூ.360 குறைந்த தங்கத்தின் விலை!

ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்யும் கூகுள்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share