சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (ஜூன் 21) வெளியிட்டார்.
கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்பில்,
“சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரூ.2 கோடி மானியத்தில் 200 பெண்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வாங்க ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ரூ.1 கோடி செலவில் திருவள்ளூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மகளிர் விடுதிகள் மறுசீரமைக்கப்படும்.
கைம்பெண்கள், நலிவுற்ற பெண்கள் , ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.62.83 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை திருமண தடைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…