சுங்கக்கட்டணத்தை குறைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளார். minister ev velu replies
சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை! minister ev velu replies
தமிழக சட்டமன்றத்தில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது,
“திமுக அரசு பொறுப்பேற்றபோது 48 சுங்கச்சாவடிகள் இருந்தன. தற்போது 65-க்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்று பேசினார்.

அமைச்சர் வேலு பதில்! minister ev velu replies
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “தமிழகத்தில் தற்போது 76 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 13 சுங்கச்சாவடிகள் காலாவதியாவிட்டது. இவற்றின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய அரசு, சுங்க விதிகளை மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டது என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டணங்களை குறைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
