அமைச்சர் அனிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிடும் ED: இன்று முடிவு தெரியும்!

Published On:

| By Aara

minister anitha radhakrishnan case ED petition tucitcorin court

திமுக அரசின் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்… இன்னொரு அமைச்சர் பொன்முடி பல மணி நேர அமலாக்கத் துறை விசாரணை செய்யப்பட்டிருக்கும் நிலையில்…இன்று (ஜூலை 19) மூன்றாவது அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அமலாக்கத்துறை மேற்கொண்ட ஒரு அதிரடி மூவ் இந்த வழக்கு விசாரணை பற்றிய எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரங்களில் அதிகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 இல் தொடர்ந்த வழக்குதான் இது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது  அமலாக்கத்துறை சார்பில், ‘இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று புதுவிதமான ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதாவது சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள (வழிகாட்டு மதிப்பு மார்க்கெட் மதிப்பு அல்ல) சொத்துகளையும் முடக்கியுள்ளது. அனிதாவை விசாரணைக்கும் அழைத்திருந்தது அமலாக்கத்துறை.

இந்த நிலையில்தான்… ”அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசின் அமைச்சராக இருக்கிறார். இந்த வழக்கை நடத்தும் தமிழ்நாடு அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காப்பதில்தான் அக்கறை செலுத்துகிறது. எனவே பிராசிகியூஷன் முறையாக நேர்மையாக நடக்க வேண்டும். அதனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்புக்கு உதவ விரும்புகிறோம்.  assist prosecution என்ற வகையில் அமலாக்கத்துறையை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஏப்ரல் 19 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு செய்தது அமலாக்கத்துறை.

ADVERTISEMENT


இதற்குப் பிறகு இவ்வழக்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் உட்பட சிலர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அமலாக்கத்துறையின் மனு மீது கடந்த விசாரணை தினமான ஜூன் 21 ஆம் தேதி முடிவெடுக்கப்படவில்லை.
ஏப்ரல் 19 ஆம் தேதி அமலாக்கத்துறை தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அப்போது இருந்த நீதிபதியால் அட்மிட் செய்யப்படவில்லை. ஜூன் 21 ஆம் தேதி அமலாக்கத் துறை  வழக்கறிஞர்  நீதிமன்றத்தில் தங்களது மனு குறித்து வலியுறுத்தவில்லை.  நீதிமன்ற நடைமுறைகளின்படி இதில் முடிவெடுக்கப்படும் என்பதால் அமலாக்கத் துறை வலியுறுத்தவில்லை என்றும் சொல்லப்பட்டது.

இந்த  பின்னணியில்தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று (ஜூலை 19) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதனால்,   அமலாக்கத்துறையின் assist prosecution கோரிய மனு மீது இன்று தூத்துக்குடி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை நீதிமன்றம் அமலாக்கத்துறையின் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால், தற்போது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அந்தந்த வழக்குகளில் அமலாக்கத்துறையும் தன்னை assist prosecution ஆக சேர்த்துக் கொள்ள மனு தாக்கல் செய்யும் சூழல் உருவாகலாம்.

வேந்தன்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி

அடுத்த டார்கெட் இந்த மூவர்தான்… ஸ்டாலினுக்குக் கிடைத்த டாப் அலர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share