‘மினிக்கி மினிக்கி’ : கவனம் ஈர்க்கும் தங்கலான் பாடல்!

Published On:

| By Kavi

தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடலின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் – 2 படம் வெளியானதை தொடர்ந்து தங்கலான், கங்குவா, வேட்டையன் படங்களை வெளியிடுவதற்கான முன் பணிகள் வேகமெடுத்துள்ளன.

அந்த வகையில் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் தங்கலான் முக்கியமான படமாக உள்ளது.

இந்தப் படத்தை ஸ்டுடியோ கீரின்-நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதனால் படம் அறிவிக்கப்பட்டது முதல் சினிமா பார்வையாளர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது


சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. அதில் விக்ரமின் தோற்றம், அவரது நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் முதல் பாடலான ‘மினிக்கி மினிக்கி’ பாடல் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புரொமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலில் விக்ரம் – பார்வதியின் நடனம் கவனம் ஈர்க்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

நேரடி ஒளிபரப்பு… ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ!

இந்தியன் 2 : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share