ரூ.1,700 கோடி வருவாய்… இயற்கை வளங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்!

Published On:

| By Selvam

சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 24) நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதில் இயற்கை வளங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில்,

“கனிம சலுகை வழங்கியதன் மூலம், 2021-2022-ஆம் நிதியாண்டில் ரூ.1,212.87 கோடியாக ஈட்டப்பட்ட வருவாய், 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,704.14 கோடியாக உயர்ந்துள்ளது. mineral department earned 1700 crore

கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை நிர்வகிப்பதற்காக, 2022-ஆம் ஆண்டில் பசுமை நிதியம் என்ற ஒரு நிதியம் உருவாக்கப்பட்டது. சிறு கனிம குத்தகைதாரர்கள் பசுமை நிதியத்திற்கு பங்களித்து வருகின்றனர்.

மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு கனிம குத்தகைதாரர்கள் சட்ட ரீதியான பங்களிப்பு வழங்குகிறார்கள். இந்த நிதியை கொண்டு சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுவரை 3,237 திட்டங்கள் ரூ.1,034.68 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளைக்கு பெருங் கனிமங்களின் குத்தகைதாரர்களால் வழங்கப்படும் சட்டப்பூர்வமான பங்களிப்புடன், மாநிலத்தில் உள்ள பெருங்கனிமங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வேதியியல் உபகரணங்களை ரூ.2 கோடியில் வாங்குவதற்காக இந்த நிதியின்கீழ் வழங்கப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பாக சுரங்கங்கள் மற்றும் குவாரிகளிலிருந்து கனிமங்களை எடுத்து செல்வதை கண்காணிப்பதற்கு, மதுரை, திருச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் மண்டலத்தில் அமைந்துள்ள பறக்கும் கண்காணிப்புகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீவிர கண்காணிப்பு மூலம் 2024-2025-ஆம் நிதியாண்டில் (2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை), சட்டத்திற்கு புறம்பாக கனிமங்களை எடுத்து சென்ற 3,741 நான்கு மற்றும் அதற்கு மேலான சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. mineral department earned 1700 crore

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share