கிச்சன் கீர்த்தனா: மில்க் கேசரி

By Minnambalam

|

Published on 24 Mar 2023, 6:45 AM

எந்த விருந்தையும் ஸ்பெஷலாக்குவதில் எளிதாகச் செய்யக்கூடிய கேசரிக்கு முக்கிய இடமுண்டு. கேசரி வகையில் வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு இந்த மில்க் கேசரி பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பால் – 200 மில்லி லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் – 7
வெள்ளை ரவை – 100 கிராம்
நெய் – 30 மில்லி
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு – 2
பிஸ்தா – 2
செர்ரி பழம் – 2

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

ADVERTISEMENT

குறிப்பு: கேசரிக்கு நிறம் வேண்டுமென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம் அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப் பூவைத் தூவியும் பரிமாறலாம்.

பனீர் பாயசம்

கேரட் மில்க் ஷேக்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel