தமிழகத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முகமது நபியின் பிறந்தநாளை மிலாது நபி நாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 4-ஆம் தேதி ரபிஉல் அவ்வல் மாத பிறை தென்படாததால், செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாது நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடிடி நிறுவனங்களுக்கு செக் வைத்த அமீர்கான்
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்? – ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கேள்வி!
