ADVERTISEMENT

வித்தியாசமாக கேட்ச் பிடித்த வீரர்: வைரல் வீடியோ!

Published On:

| By Jegadeesh

பிரிஸ்பென் ஹீட் அணி வீரர் மைக்கேல் நாசீர் வித்தியாசமாக கேட்ச் பிடித்தது அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்த பின்பும் சமூக வலைதளங்களில் அந்த கேட்ச் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

பிக்பேஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நேற்று(ஜனவரி 1) நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பிரிஸ்பென் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 20 ஓவர்களில் 224/5 ரன்கள் எடுத்தது.அதை தொடர்ந்து 225ரன்களை துரத்திய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

முன்னதாக அப்போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கிய ஜோஸ் சில்க் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக ரன்களை சேர்த்து சிட்னி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வர போராடினார்.

ADVERTISEMENT
michel naser brilliant catch

குறிப்பாக 19-வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்டிய அவர் டீப் திசையில் நோக்கி சிக்சரை பறக்க விட்டார்.

அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பிரிஸ்பென் ஹீட் அணி வீரர் மைக்கேல் நாசீர் முடிந்தளவுக்கு தாவி பந்தை பிடித்தார்.

ADVERTISEMENT

அதே சமயம் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரி எல்லையை கடந்த அவர் பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்றார்.

ஆச்சரியப்படும் வகையில் அவர் வீசிய கோணத்தில் மைதானத்திற்குள் செல்லாத பந்து தொடர்ந்து அவரை நோக்கியே பவுண்டரி எல்லைக்குள் காற்றில் இருந்தது.

அப்போது பவுண்டரிக்குள் சென்று 3 – 4அடிகள் மெதுவாக ஓடிய அவர் தன்னை நோக்கி வந்த பந்தை கச்சிதமாக பிடிக்க முயற்சிதார்.

ஆனால் பவுண்டரிக்குள் இருந்த அவர் தனது கையால் கீழே வந்து கொண்டிருந்த பந்தை பிடிக்க சென்ற போது ஒரு காலில் தாவி இன்னொரு காலையும் தரையிலிருந்து எடுத்த பின்னர் பந்தை பிடித்து அடுத்த அரை நொடிக்குள் மீண்டும் மைதானத்திற்குள் இருக்கும் வகையில் காற்றில் தூக்கி போட்டார்.

அதாவது பந்தை பிடிக்கும்போது அவரது இரு கால்களும் அரை நொடிப் பொழுது காற்றில் இருந்தது.

அதனால் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை பிடித்த அவர் கேட்ச் பிடித்து விட்டதாக நடுவரிடம் வாதாடினார்.

அதை தொடர்ந்து 3-வது ஒன்றுக்கு 2முறை அவரது இந்த சாதுரியமான வேலையை சோதித்து பார்த்தார். இறுதியில் பவுண்டரிக்குள் சென்றாலும் பந்தை அவர் கையில் பிடிக்கும் போது 2 கால்களும் தரையில் இல்லாத காரணத்தால் அது அவுட் என்று நடுவர் அறிவித்தார்.

அதனால் வர்ணையாளர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து வியப்பில் ஆழ்ந்தது போலவே ரசிகர்களும் வாய் மேல் கை வைத்து நின்றார்கள்.

தற்போது இந்த கேட்ச்சை அவுட் என்று ஒரு தரப்பினரும் நாட்-அவுட் என்று மற்றொரு தரப்பும் சமூக வலைதளங்களில் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்: வைரல் புகைப்படம்!

அதிகாலையில் சோகம்: பத்திரிக்கையாளர் மரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share