குஜராத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. MI VS GT : hardik win the toss and choose bat
ஐபிஎல் தொடரில் குவாலிபயர் போட்டியைத் தொடர்ந்து அதே முல்லன்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான எலிமினேட்டர் போட்டி இன்று (மே 30) இரவு நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
அப்போது அவர், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நேற்றைய ஆட்டத்திலிருந்து பிட்ச் இன்று வித்தியாசமானதாக தெரிகிறது. கொஞ்சம் புல் குறைவாக உள்ளது. பெரிய ஆட்டம் முதலில் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும். கடந்த 9 ஆட்டங்களாக நாங்கள் நாக் அவுட் போல விளையாடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று குஜராத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இரு அணிகளும் தங்களது பிளேயிங் லெவனை அறிவித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை அணியை பொறுத்தவரை மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ் மற்றும் தீபக் சாஹருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் ராஜ் அங்கத் பாவா விளையாட உள்ளனர்.
ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், அங்கத் ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன்.
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் அணியை பொறுத்தவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பட்லருக்கு பதிலாக மெண்டிஸும், அர்ஷத்துக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் களமிறங்குகின்றனர்.
சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா