சிஎஸ்கே-வை பந்தாடிய மும்பை… அதிரடி காட்டிய ரோகித் ஷர்மா

Published On:

| By Selvam

MI vs CSK highlights

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. MI vs CSK highlights

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தது.

MI vs CSK highlights

மும்பை இந்தியன்ஸ் MI vs CSK highlights

சென்னை அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேக் ரஷீத், ரச்சின் ரவிந்தரா ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற, ஆயுஷ் மாத்ரே நிதானமாக ஆடி 32 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ரவிந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் அரை சதம் விளாசினர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனி, ஜேம் ஓவர்டன் தலா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், சஹர், அஸ்வந்த் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர். MI vs CSK highlights

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ரியான் ரிக்கில்டன், ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய ரோகித் ஷர்மா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

MI vs CSK highlights

ரியான் ரிக்கில்டன் 24 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஜோடி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறவிட்டனர்.

இதனால் 15.4 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 177 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 76 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். MI vs CSK highlights

MI vs CSK highlights
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share