மெக்சிகன் யூஎப்ஓ ஆர்வலரும் பத்திரிகையாளருமான ஜெய்ம்ஸ் மெளசன் இரண்டு ஏலியன் உடல்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
மெக்சிகோவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை நிகழ்ச்சியில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு ஏலியன்கள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏலியன்களின் உடல்கள் 2017-ஆம் ஆண்டு பெரு நாட்டின் நாஸ்கா பாலைவனத்தில் மீட்கப்பட்டதாக மெளசன் கூறுகிறார். இதன் உடல்கள் மனிதர்களிடமிருந்து 30 சதவிகிதம் வேறுபட்ட மரபணு அமைப்பை கொண்டுள்ளது. மெக்சிகோவில் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் நடத்திய கார்பன் டேட்டிங்கில் ஏலியன்கள் உடல்களின் கைகளில் மூன்று தனித்துவமான விரல்கள் மற்றும் கால்களை கொண்டுள்ளது. மேலும் இது 1000 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்துள்ளது.
ஏலியன்களின் உடல்கள் மனித உருவத்தை ஒத்திருந்தாலும் உள்ளிழுக்கும் கழுத்து, நீளமான மண்டை ஓடுகள், இலகுவான எலும்புகள், பற்கள் இல்லாத உடலமைப்பை கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ஜெய்ம்ஸ் மெளசன் கூறும்போது, “ஏலியன் மாதிரிகள் நமது நிலப்பரப்பு பரிணாமத்தின் ஒரு பகுதியாக இல்லை. இவை யுஎஃப்ஓ ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் அல்ல. இவர்கள் புத்திசாலிகளாக நம்முடன் வாழ்ந்துள்ளனர். நமது உலகில் உள்ள வேறு எந்த உயிரினங்களுடனும் தொடர்பில்லாத மனிதரல்லாத மாதிரிகளாக இவை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெளிவாக நிரூபணமாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மெக்சிகன் காங்கிரசின் விளக்கக்காட்சி குறிப்பிடத்தக்கவகையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மெக்சிகன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன் உலகம் முழுவதும் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. பல அறிவியல் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 2015-ஆம் ஆண்டு பெரு நாட்டின் நாஸ்கா பாலைவனம் அருகில் ஏலியன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக மெளசன் கூறினார். ஸ்னோப்ஸ்.காம் நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையில் அது ஏலியன் உடல் அல்ல மனித குழந்தையின் மம்மியாக்கப்பட்ட உடல் என்பது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
முடங்கிய இண்டர்காம் சிஸ்டம்… தவிக்கும் கைதிகள்… கவனிக்குமா அரசு?
ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
