மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு!

Published On:

| By Selvam

Mettur dam water release

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜனவரி 3) முதல் இரண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் திறந்து கோரி முதல்வர் ஸ்டாலினை விவசாயிகள் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகளின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு TMC தண்ணீரை இன்று முதல் திறந்துவிட  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மரணத்துக்கு பிறகு என்ன நிகழ்கிறது?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel