மேட்டூர் அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீரானது முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படுவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது.
இதனையடுத்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த ஜூன் 28-ஆம் தேதி மேட்டூர் அணை 110.76 அடியை எட்டியபோது, டெல்டா பாசன வசதிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார்.
இந்தநிலையில், தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், ஜூலை 30-ஆம் தேதி முழு கொள்ளளவான 120 கன அடியை மேட்டூர் அணை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரானது, முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதாவது… ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வெண்டும். பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மக்களை முன்னெச்சரிக்கையாக மீட்க வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரடி லஞ்சக் கொள்முதல் நிலையம்… தவிக்கும் விவசாயிகள்!
வயநாடு நிலச்சரிவு… “தந்தையை இழந்த துக்கத்தை தற்போது உணர்கிறேன்” – ராகுல் எமோஷனல்!