ADVERTISEMENT

சம்மர் சீசன்: மேட்டுப்பாளையம் – ஊட்டி சிறப்பு ரயில்!

Published On:

| By Selvam

சம்மர் சீசன் தொடங்கப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மலை ரயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

123 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம்  2005-ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

ADVERTISEMENT

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை தாண்டி, இதமான சூழலில் மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி, சிற்றருவிகளை ரசித்துக்கொண்டே இம்மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள்.

மேலும், ஊட்டியில் தற்போது சம்மர் சீசன் தொடங்கியுள்ளதாலும், கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க உள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்குச் செல்லும் மலை ரயிலில் பயணம் செய்ய சீட்டு கிடைக்காதவர்கள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால்,

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

Mettupalayam to Ooty Special Train

இதைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வரும் ஏப்ரல் 16 முதல் ஜூன் 25ஆம் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் இந்த சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.

அதேபோல், ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது.

இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராஜ்

போராடிய கொல்கத்தா… வெற்றியை பறித்து சென்ற மழை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் வரும் என்பது உண்மையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share