மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

Published On:

| By Balaji

மெட்டி ஒலி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 40.

பல மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அவர் மறைவு சின்னதிரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரை இயக்குநர் விக்கிரமாதித்தன் கூறியிருப்பதாவது…

ADVERTISEMENT

எவ்வளவு கிண்டல் செய்தாலும்..குறைசொன்னாலும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருவாய்..

இனி அந்த சிரிப்பை பார்க்க முடியாது..

ADVERTISEMENT

மரணம் நிச்சயமானது தான்…

ஆனால்

உனது மரணம் கொடியது…

கண்ணீருடன் வழியனுப்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

**-அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share