டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மெட்ரோ ரயில் பயணம்: புதிய வசதி விரைவில் அறிமுகம்!

Published On:

| By admin

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவது போல மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை நிர்வாகம் செய்து வருகிறது. மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்காமல் செல்லும் வகையில் கியூஆர் கோடு, ஸ்மார்ட் கார்டு, டோக்கன் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில் பயணிகள் மேலும் எளிதாக பயணம் செய்யும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயண திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் இதைச் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.
இதுகுறித்து பேசியுள்ள மெட்ரோ ரயில் அதிகாரிகள், “பயணிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பயணம் செய்ய ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வங்கிக்கணக்கு அடிப்படையில் இந்த வசதியை பெற முடியும்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவது போல மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியை பெற வங்கிக்கணக்கில் பணம் இருக்க வேண்டும்.
இந்த கார்டுகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் கட்டண நுழைவு வாயிலில் ‘ஸ்கேன்’ செய்தால் அவரது வங்கிக்கணக்கில் இருந்து பயணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். பயணம் தொடங்கும் நிலையத்தில் இருந்து முடியும் நிலையம் வரையிலான பயணக் கட்டணம் கணக்கிடப்பட்டு இணையதளம் வழியாக வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்படும். இது முழுமையாக வங்கி மூலம் நடைபெறும் சேவையாகும். இதன் மூலம் பயணிகள் எளிதாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share