சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ சேவை!

Published On:

| By Jegadeesh

Metro service in Salem Trichy Nellai

சேலம், திருச்சி, நெல்லைக்கான மெட்ரோ ரயில் சேவை சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் இன்று (ஆகஸ்ட் 31) சமர்ப்பித்தது மெட்ரோ நிறுவனம்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது.

ADVERTISEMENT

சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சி, நெல்லை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்ட பணிகளாக மூன்று மாவட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) தமிழக அரசிடம் மெட்ரோ நிறுவனம் இன்று சமர்ப்பித்துள்ளது.

Chennai Metro Rail Limited sticks with blue as the colour for trains to be acquired for the phase II project - The Hindu

ADVERTISEMENT

திருச்சியில் 26 கிலோமீட்டருக்கு ஒரு கட்டமாகவும், 19 கிலோமீட்டருக்கு ஒரு வழித்தடமாகவும் என இரண்டு கட்டங்களாக மொத்தம் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சேலம் மற்றும் நெல்லைக்கான விரிவான சாத்தியக் கூறு ஆய்வறிக்கையை மெட்ரோ நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. நெல்லைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் மெட்ரோ அமைவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிரதமர் மோடி செல்வாக்கு அதிகரிப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்!

உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல்!

வெட்கி தலை குனியக் கூடிய செய்தி: தினமலர்

தொழுகை செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துநர் தற்கொலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share