இனிமே அந்த டிக்கெட் கிடையாதாம்… மெட்ரோ முக்கிய அப்டேட்!

Published On:

| By Selvam

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். Metro Rail Group ticket

இந்தசூழலில், மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயணத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்தோறும் மூன்று லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 86 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் குழு பயணச்சீட்டு பெறும் வசதி, நாளையுடன் (மார்ச் 1) திரும்ப பெறப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10 சதவிகித தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி நாளை (மார்ச் 1) முதல் திரும்பப் பெறப்படுகிறது.

டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20 சதவிகிதம் தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Metro Rail Group ticket

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share