தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில் இப்போதே தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. next five days heat
இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“மார்ச் 4-ஆம் தேதி முதல் 8 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். ஓரிரு இடங்களில் 2 − 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
செனையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. next five days heat