வெப்ப அலைகள் அதிகரிக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை

Published On:

| By Balaji

Meteorological Center warns of increasing heat waves

தனியார் வானிலை ஆராய்ச்சி மையமான ஸ்கைமெட்டின் தலைமை வானிலை ஆய்வாளர் ஜி.பி சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில்,

’கடந்த ஆண்டின் வெப்ப அலைகளை அலகு (யூனிட்) அளவுகளில் அல்லது எண்ணிக்கையில் கூறமுடியவில்லை. ஆனால், இந்த ஆண்டின் வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதாவது, அதிகபட்ச வெப்பநிலையாக 45 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை வெப்ப அலை என்று சொல்கிறோம். வெப்ப அலைகளுக்கு காரணமாகக் கூறப்படுபவை, தொழில்துறை உற்பத்திக்கான நடவடிக்கைகள், பசுமை இல்லத்தின் வாய்ப்புகள் அதிகரிப்பும், பசிபிக் பெருங்கடலின் மேற்புற நீர் வெப்பமடைதலான எல் நினோவின் விளைவாகவும் இருக்கும்’ என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share