ADVERTISEMENT

இன்ஸ்டா & ஃபேஸ்புக் ப்ளூ டிக்: பலன்கள் என்ன?

Published On:

| By Jegadeesh

ட்விட்டரை தொடர்ந்து அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டண சந்தா கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் முதன்முதலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுக்கு ப்ளூ டிக் கட்டண சந்தா சேவை அறிமுகமானது. இதற்கு ’Meta Verified’ என்று பெயரிடப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கான மாதாந்திர கட்டணம் இணையதளத்திற்கு மாதம் 11.99 டாலர் ( ரூபாய் 989 ) என்றும், மொபைல் தளத்திற்கு மாதம் 14.99 டாலர் (ரூபாய் 1237 ) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவிலும் ’Meta Verified’ கொண்டு வரப்பட்டுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நேற்று (மார்ச் 17 )அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்களும் ப்ளூ டிக் பெறலாம். போலி கணக்கு பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வாடிக்கையாளர் உதவியை நேரடியாக பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

விதிகள் என்ன?

ADVERTISEMENT

மாதாந்திர கட்டணத்தை தாண்டி, சில விதிகள் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும்.

’Two Factor Authenticator’ எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மெட்டாவால் சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்கள் தங்களது பெயர், புகைப்படம், பயனர் பெயர் அல்லது பிறந்த தேதியை மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் சரிபார்ப்பு செயல்முறையை தொடங்க வேண்டும்.

பலன்கள் என்ன?

மெட்டா வெரிஃபைடு பெற்ற பயனர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள், ஃ பேஸ்புக் ரீல்ஸ் ஆகியவற்றில் பிரத்யேக ஸ்டிக்கர்களைப் பெறலாம்.

பேஸ்புக்கில் ஒரு மாதத்திற்கு 100 ஸ்டார்கள் பெறலாம். இதனால், அதை மற்ற கிரியேட்டர்களுக்கு வழங்கி உங்கள் ஆதரவைக் காட்டலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வீட்டுவசதி வாரிய வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு!

பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மனு!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share