இன்ஸ்டா ஐடிகள் ஹேக் : தடுத்த மாணவருக்கு லட்சக்கணக்கில் பரிசு!

Published On:

| By Monisha

இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு தவறை கண்டுபிடித்து மெட்டா நிறுவனத்திற்குத் தெரிவித்த ஜெப்பூரைச் சேர்ந்த மாணவனுக்கு அந்நிறுவனம் 38 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து வயதுடைய மக்களும் சமூக ஊடகப் பக்கங்களில் தங்களுக்கென்று ஒரு ஐடி-யை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அதிலும் ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிடுவதில் மூழ்கி விடுகின்றனர். இதில் பொழுதுபோக்கு மட்டுமல்லாது சில பிரச்சனைகளும் உண்டு.

ரீல்ஸ் பதிவிட்டு மிகவும் பிரபலமானவர்களின் புகைப்படங்களை வைத்து பொய்யாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி அதிலிருந்து பலருக்குக் குறுஞ்செய்திகள் அனுப்புவது.

ADVERTISEMENT

ஒருவரது இன்ஸ்டாகிராம் ஐடியை ஹேக் செய்து அவர்களது ஐடியிலிருந்து மற்றவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் ஹேக் செய்த ஐடி பெயரை மாற்றுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீரஜ் சர்மா என்ற மாணவர் ’ஒருவரது ஐடியை ஹேக் செய்து பாஸ்வேர்ட் இல்லாமலே ஐடியின் பெயரை மாற்றுவது மற்றும் ரீல்ஸ்களின் தம்நெயில்களை மாற்றுவதற்கான பிழையைக் கண்டுபிடித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன்மூலம் இவர் பல கோடி மக்களின் இன்ஸ்டாகிராம் ஐடி ஹேக் செய்யாமல் காப்பாற்றியுள்ளார்.

இதுகுறித்து நீரஜ் சர்மா மெட்டா நிறுவனத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அவரது இந்த கண்டுபிடிப்பு குறித்து ஷர்மா கூறியது, “பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் ஒரு பிழை இருந்தது, அதன் மூலம் ரீல்ஸின் தம்நெயில்களை எந்த ஐடியிலிருந்தும் மாற்றலாம். பயனர் இல்லாமலே அதை மாற்ற முடியும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில், எனது இன்ஸ்டாகிராமில் தவறுகளைக் கண்டறியத் தொடங்கினேன். மிகுந்த கடின உழைப்புக்குப் பிறகு, ஜனவரி 31 இன்ஸ்டாகிராமின் தவறு பற்றி நான் அறிந்தேன்.

அதன் பிறகு, நான் ஒரு அறிக்கையை அனுப்பினேன். இதற்கு இன்ஸ்டாகிராமிடமிருந்து மூன்று நாட்கள் கழித்து பதில் செய்தி வந்தது.

அதில், நான் கண்டுபிடித்த பிழைக்கான டெமோவை பகிருமாறு கேட்டுக்கொண்டது” என்று கூறினார்.

இதன்பிறகு ஷர்மா 5 நிமிடத்தில் பாஸ்வோர்ட் இல்லாமலே வேறொருவரின் ஐடியில் இருந்த ரீல்ஸின் தம்நெயிலை மாற்றிக் காண்பித்துள்ளார்.

இதனை மெட்டா நிறுவனம் அங்கீகரித்து அவருக்கு ரூ. 35 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக மே 11 அன்று அறிவித்திருந்தது.

ஆனால் பரிசுத் தொகை வழங்குவதற்கு மூன்று மாதம் தாமதமானதால் பரிசுத் தொகையை 3 லட்சம் அதிகரித்து 38 லட்சமாகப் பரிசை வழங்கியுள்ளது.

மோனிஷா

6 பந்துகளில் 6 சிக்சர்: வெற்றியை மகனுடன் கொண்டாடிய யுவராஜ் சிங்

புதிய கல்வி கொள்கை என்பது மரண சாசனம்: சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share