இந்தியாவில் அறிமுகமான “மெட்டா ஏஐ”: என்னென்ன பயன்கள் தெரியுமா?

Published On:

| By indhu

இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாட்பாட்டான “மெட்டா ஏஐ”ஐ மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்கள் விரைவில் பயன்படுத்தலாம். பயனர்களின் பயன்பாட்டுக்கு படிப்படியாக இது கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதனை இந்தியாவில் ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மெட்டா நிறுவன சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது மெட்டா ஏஐ வலைதளத்திலும் இந்த சாட்பாட்டனை பயன்படுத்தலாம்.

இது சமீபத்திய ஏஐ மாடலான லாமா-3 (Llama 3) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மெட்டா ஏஐ’ சேவையானது கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் ‘மெட்டா கனெக்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் உலக அளவில் அறிமுகம் செய்தது.

இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இதன் பயன்பாட்டை தள்ளி வைத்திருந்தது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம், அதன் ஜெமினி சாட்பாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், மெட்டாவும் தனது ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த சாட்பாட்டினை சர்வதேச அளவில் மெட்டா அறிமுகம் செய்தது. இருந்தும் இந்த பாட் பயன்பாட்டை இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் கூகுள் நிறுவனம், அதன் Gemini சாட்பாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதையடுத்து மெட்டாவும் தனது ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

மற்ற ஜெனரேஷன் ஏஐ சாட்பாட்களை போலவே இதிலும் பயனர்கள் பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ளலாம். பயனர்கள் இதைக் கொண்டு மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF போன்றவற்றை உருவாக்க முடியும்.

இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். கூகுள், மைக்ரோசாஃப்ட் வழங்கும் நிகழ்நேர சேர்ச் ரிசல்ட்களை பயனர்கள் இதில் பெற முடியும். ஜூன் 24ஆம் தேதி முதல் இந்த ஏஐ பாட் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓசூரில் விமான நிலையம், திருச்சியில் நூலகம்: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

’கல்கி 2898 ஏடி’ ரிலீஸ் : உருக்கமான அறிக்கை வெளியிட்ட வைஜெயந்தி மூவீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share