நான் சிறையில் இருந்தாலோ அல்லது வெளியில் இருந்தாலோ எப்போதும் மக்களுக்கு சேவை செய்வதை தொடர்வேன் என்று சிறையில் இருந்தவாறு கெஜ்ரிவால் செய்தி அனுப்பியதாக அவரது மனைவி சுனிதா தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம்(மார்ச் 21) மாலை கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை மார்ச் 28 வரை அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக செய்தி ஒன்று அனுப்பியிருப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “அன்பான நாட்டு மக்களே, நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சிறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டுக்காக தொடர்ந்து சேவை செய்வேன். எனது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். நான் என் வாழ்க்கையில் நிறைய போராடி வருகிறேன், இது தொடரும் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை
எந்த சிறையாலும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. சிறையில் இருந்து வந்தவுடன் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். நான் சிறைக்கு அனுப்பப்பட்டதால் சமூக நலன் மற்றும் பொதுநல சேவை நின்றுவிடக் கூடாது.
मुख्यमंत्री @ArvindKejriwal जी ने देशवासियों के लिए Jail से भेजा संदेश:
मुख्यमंत्री जी की धर्मपत्नी @KejriwalSunita जी ने पढ़ा संदेश:
मुझे गिरफ़्तार कर लिया गया है। मैं लोहे का बना हूँ।
मेरे शरीर का एक-एक कण देश के लिए है। मेरा जीवन ही संघर्ष के लिए हुआ है।
कुछ देश के अंदर और… pic.twitter.com/flpap0kasa
— AAP (@AamAadmiParty) March 23, 2024
என்னை கைது செய்ததால் பாஜகவினரை வெறுத்துவிடாதீர்கள், அவர்களும் நமது சகோதர சகோதரிகளே. விரைவில் சிறையில் இருந்து வந்துவிடுவேன்.
இந்தியாவுக்கு உள்ளேவும் வெளியேவும் பல சக்திகள் நாட்டை பலவீனப்படுத்தி வருகிறார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. அந்த தீய சக்திகளை கண்டறிந்து அவர்களை தோற்கடிக்க வேண்டும்” என்று கெஜ்ரிவால் தெரிவித்ததாக சுனிதா கூறினார்.
இதனிடையே சுனிதா கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அதிகார ஆணவத்தால் மோடி கைது செய்திருக்கிறார். அவர் அனைவரையும் நசுக்க முயற்சிக்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதலமைச்சர் எப்போதும் உங்களுடன் நிற்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Heatwave: சட்டென மாறிய வானிலை… இங்க தான் ‘வெயில்’ கொளுத்துதாம்!