மனைவியின் பிறந்த நாளுக்காக லண்டனில் இருந்து வந்த இளைஞர்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

Published On:

| By Kumaresan M

மனைவியின் பிறந்த நாளுக்காக லண்டனில் இருந்து வந்த இளைஞரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று டிரம்மில் சிமெண்ட் கலவையில் அடைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள பிரம்பூரி பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். 35 வயதான இவருக்கு முஸ்கன் ரஸ்தோகி என்ற மனைவி மற்றும் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்கள், அங்குள்ள அபார்ட்மென்டில் வசித்துள்ளனர். Merchant Navy Officer Murder

சவுரப் ராஜ்புத் மெர்ச்சன்ட் கப்பலில் பணிபுரிகிறார். லண்டனில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் மனைவியின் பிறந்த நாளை கொண்டாட மீரட் வந்துள்ளார். இதற்கிடையே, முஸ்கனுக்கு ஷகீல் சுக்லா என்ற மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், கணவர் திரும்பி வந்ததால், ஷகீலுடன் உறவை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த முஸ்கன் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவர் சவுரப்பை கொலை செய்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை 15 துண்டுகளாக வெட்டி, டிரம்மில் சிமென்ட் கலவையில் போட்டு பூசி விட்டனர்.

அதற்கு பிறகு, கொலை செய்த குற்றவுணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் சிம்லாவுக்கு ஆண் நண்பர் ஷகீலுடன் முஸ்கன் சென்றுள்ளார். கூடவே , கணவரின் செல்போனையும் எடுத்து சென்றுள்ளார். அங்கு, ஒரு கோவிலில் வைத்து முஸ்கனுக்கு ஷகில் தாலி கட்டியுள்ளார்.

கணவரின் செல்போனை கொண்டு அவரின் குடும்பத்தாருக்கு மெசேஜ் மட்டும் அனுப்பி வந்துள்ளார். சவுரபின் குடும்பத்தினர் அவரிடம் பேச வேண்டுமென்று சொன்னால் போனை கொடுக்க மறுத்து விடுவார். இதனால், சந்தேகமடைந்த சவுரப்பின் குடும்பத்தினர் முஸ்கனின் தாயாரிடத்தில் விஷயத்தை கூறியுள்ளனர். Merchant Navy Officer Murder

இந்த நிலையில், கையில் இருந்த பணம் கரைந்து போயுள்ளது. இதையடுத்து, தனது தாயார் கவிதாவுக்கு முஸ்கன் போன் செய்துள்ளார். அப்போது அவர், சவுரப் எங்கே என்று கூறும்படி மிரட்டி கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் முஸ்கன் கணவரை கொலை செய்தது பற்றி தாயிடம் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கவிதா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, முஸ்கன் , ஷகில் இருவரையும் கைது செய்தனர். சவுரப்பின் உடல் அடைக்கப்பட்ட டிரம்மை கைப்பற்றியுள்ளனர்.

மனைவியின் பிறந்த நாளை கொண்டாட வந்து சடலமான கணவர் பற்றிய செய்தி வெளியாகி மீரட் நகரமே அதிர்ந்து போய் கிடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share