சனாதனம் பத்தி சனாகிட்ட பேட்டி: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

சனா பத்தின உதயநிதி பேசின பேச்சை வச்சி பல பேர்கிட்ட பேட்டியெடுத்துட்டேன்… இன்னும் யார்ட்டதான் எடுக்குறதுனு தெரியலை…னு நம்ம யு ட்யூப் நண்பர் புலம்பிக்கிட்டிருந்தாரு. நான் உடனே, ‘தம்பி எந்திரன் படத்துல சனாவா நடிச்ச ஐஸ்வர்யாகிட்ட கேளேன்… அப்படினு ஐடியா கொடுத்தேன். என்னண்னே இப்படி சொல்லிட்டீங்கனு கேட்டாப்ல. ‘ஏன்யா… சனாதனமே ஒரு சின்ன வார்த்தைதான். அதைக் கூட சனா சனானு சுருக்கி சொல்றியே… அதுக்குத்தான் சனாகிட்ட போய் பேட்டியெடு’னு சொல்லிட்டு வந்துட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க…

ADVERTISEMENT

மயக்குநன்
பாஜக கட்சி எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்!- முதல்வர் ஸ்டாலின்.
ஆமா தலைவரே… இன்னமும் செந்தில்பாலாஜியை பெயில்ல எடுக்க முடியலையே..?!

ADVERTISEMENT

கடைநிலை ஊழியன்
மகிழ் திருமேனி –
விடாமுயற்சி னு பேர் வச்சாலும் வச்சேன், இவர ஷூட்டிங் வர வைக்குறதுக்கே விடாமுயற்சி பண்ணனும் போலயே..

ADVERTISEMENT

தர்மஅடி தர்மலிங்கம்
ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு- சீமான்!
போட்றா தம்பி பிரேக்கை…

balebalu
அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் உள்ள பிரக்யான் ரோவர் தூக்க நிலைக்குச் சென்றுவிட்டது – இஸ்ரோ
இதென்ன கும்பகர்ணன் 6 மாதம் தூக்கம் , 6 மாதம் விழிப்பு நிலைல இருக்குற மாதிரி இருக்கு

கடைநிலை ஊழியன்
மழை வருது.. மழை வருது..
குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே தான..
அதான் இல்ல.. வேகமா போயி காயப்போட்ட துணிய எடு.

தர்மஅடி தர்மலிங்கம்
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்து விடும்” – தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்!
பிப்ரவரி 30ந்தேதிங்களா..??

குருநாதா
எங்க ஆபீஸ்ல ஞாயித்து கிழமை கூட வேலை இருக்கும் ப்ரோ.
எங்க வேலை பாக்குறீங்க ப்ரோ?
சவூதி அரேபியா ல.

மயக்குநன்
புதிய பாரதத்தை மாணவர்கள் படைக்க வேண்டும்!- அண்ணாமலை.
புதிய ‘இந்தியா’வை எதிர்க்கட்சிகள் படைச்சிட்ட காரணத்தாலா..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
காங்கிரஸை விட பெரிய கட்சி நாங்க – சீமான்
நிஜமாவா?
ஆமா.. காங்கிரஸ் ஐஞ்சு எழுத்து தான் நாம் தமிழர் கட்சி ஒன்பது எழுத்து அப்ப நாங்க தானே பெரிய கட்சி?

தர்மஅடி தர்மலிங்கம்
ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு- சீமான்!
போட்றா தம்பி பிரேக்கை…

வசந்த்
வச்ச பொருள் வச்ச இடத்தில் அப்படியே இருப்பது வீட்டில் குழந்தைகள் இல்லாததை உணர்த்துகிறது.

லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: சனாதன சர்ச்சை… உதயநிதியை கைது செய்ய டெல்லியில் ஆலோசனை!

சனாதனவாதிகள் உள்ள கூட்டணியிலிருந்து வெளியேறுவீர்களா? திமுகவுக்கு கஸ்தூரி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share