அரசியல்வாதி – காதலி வித்தியாசம் தெரியுமா – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு பத்தி டீக்கடைல பேசிட்டு இருந்தாங்க.. அந்த நேரம் பாத்து, ’மாப்ள இந்த அரசியல்வாதிக்கும், காதலிக்கும் ஒரு வித்தியாசம் தாண்டா’னு நண்பர் சொன்னாரு. ’புரியலயே… என்ன’னு கேட்டேன்.

“நாலு வருஷம் சண்ட போடுவாங்க… இல்ல சண்ட போடுற மாறி நடிப்பாங்க.. 5வது வருஷம் அதையெல்லாம் துடைச்சி தூரப் போட்டுகிட்டு சேந்துடுவாங்க. இது அரசியல் வாதிங்க…

ஆனா காதலி அப்படி இல்ல… சண்டப் போட்டா, அவ்ளோ தான்… அதையே சாக்கா வச்சி டாடா பாய்னு சொல்லிட்டு கெளம்பிடுவா”னு சொன்னான்.

காதலி இருக்காளா?னு கேட்டேன்… இல்ல’னு சொன்னான்… எப்படி இருப்பானு சொல்லிட்டு கெளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls update kumaru ttending tweets

ச ப் பா ணி

“அடுத்தது என்ன என்கிற கேள்வி நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். அதுதான் நம்மை முன்னேற்றும்.”

– நெக்ஸ்ட்டு…ரெஸ்ட்டு

balebalu

வரும் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை – திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம்

ஏழரை சனி முடிஞ்சு ரிடையர் ஆகி போகும் ன்னு பார்த்தா கடைசில எக்ஸ்டன்ஷன் கொடுத்துட்டாங்க

amudu

எப்பொருள் கணவர் வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது மனைவியின் அறிவு.

ச ப் பா ணி

கூட்டணி குறித்து பேசவில்லை, மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசினோம் – எடப்பாடி பழனிசாமி*

-Code word accept

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தக்காளி கிலோ 10 ரூபாய் தான்.. இனி ஒரு வாரத்துக்கு வீட்ல தக்காளி சட்னி, தக்காளி சோறு..

mohanram.ko

தள்ளிக் கொண்டே செல்கிறேன்…
முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது கைப்பேசியின் ‘ஷார்ட்ஸ்’

குருநாதா

நான் வேலை பாக்கும் போது நெறயப்பேருக்கு லவ் லெட்டர் குடுத்துருக்கேன்
என்ன சொன்னாங்க?
“தாங்க்ஸ் போஸ்ட்மேன்”

லாக் ஆஃப் memes trolls update kumaru ttending tweets

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share