எந்த பக்கம் திரும்புனாலும் ஒரே சனாதனமா இருக்கு. அதுமட்டுமில்ல… சனாதனமா… சந்தானமா… சமாதானமா… இப்படி ஒவ்வொரு நியூஸ் சேனல்லயும் ஒவ்வொரு மாதிரி போட்டு அதக்கப்புறம் திருத்துறானுங்கப்பா. முதல்ல ஒரு முடிவுக்கு வாங்கப்பா… நான் போயி உதயநிதி பேர்ல குஷ்பு கோயில்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுறேன்…
நீங்க அப்டேட்ட பாருங்க…

கடைநிலை ஊழியன்
பாஸ், எனக்கு வேற வேல தாங்க.. இந்த வேல எனக்கு புடிக்கல..
சம்பளம் வந்திருக்குமே.. வாங்கும் போது நல்லா இருந்துச்சா.. போயி வேலைய பாரு..

மயக்குநன்
நாங்கள் தனித்தனி கட்சியாக இருந்தாலும் நாட்டைக் காப்பாற்ற ஒன்றாகச் சேர்ந்துள்ளோம்!- முதல்வர் ஸ்டாலின்.
நாட்டைக் காப்பாத்திய பிறகு தனித்தனி கட்சியா ஆகாம இருந்தா சரி..!

Sivajis97714496*
பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை
RTI தகவல்
அப்படியே எத்தனை நாள் பார்லிமென்ட் விவாதத்துக்கு வந்தாரு எத்தனை முறை ப்ரஸ்மீட் கொடுத்தாரு ன்னு கேளுங்க தமாசா இருக்கும்

படிக்காதவன்™
சூடான வடைகள் எங்க கிடைக்கும்
வேற எங்க அரசியல்வாதிகள்
பேச்சில் தான்…
ℳsd ❝இதயவன்❞
நான் 5 வயதில் இருந்து அரசியலில் இருப்பவன் ~ சீமான்
எது ஸ்கூல்ல சோசியல் சயின்ஸ் படிச்சதெல்லாம் அரசியலா?!
https://twitter.com/i/status/1698570209764708536
ஜோ…
சனாதானம்னா என்ன சொல்லு?
குஷ்பூ ~ எனக்கு கோயில் கட்டுனாங்கள்ல, அதான் சனாதானம்.

சரவணன். ????
நம்ம கிட்ட ஓரளவுக்கு மேலே பேச்சே இல்லை, வீச்சு தான்..
~ சூப்பர்டா மச்சி..
அப்படின்னு என் மனைவி சொன்னா..

கடைநிலை ஊழியன்
ஜி நவ் –
யாருடா நீங்க.. நம்மள பத்தி டிரெண்ட் பண்ண சொன்னா.. உதயநிதி ‘ய டிரெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க…

balebalu
வேதம் , புராணம் என்று ஆரம்பித்த சனாதன விளக்கம் கடைசியில்
குஷ்பு க்கு கட்டிய கோவிலில் முடிந்தது ????-Sanatanam
தர்மஅடி தர்மலிங்கம்
எங்களது கூட்டணியின் சிறந்த விளம்பர தூதராக பிரதமர் மோடி திகழ்கிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அப்போ… உங்க கூட்டணிக்கு விளம்பர செலவு மிச்சம்னு சொல்லுங்க.?!

மயக்குநன்
இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது!- திமுக எம்பி திருச்சி சிவா.
எங்களுக்கு என்னவோ அமலாக்கத்துறைதான் உத்துநோக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது தலைவரே..!
லாக் ஆப்
யாரையும் புண்படுத்தக் கூடாது : உதயநிதி பேச்சு குறித்து மம்தா
