இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்வீட்களை இன்றைய அப்டேட் குமாரில் பார்க்கலாம்…
ஜானகிராமன்
#டிட்பிட்ஸ்
கோக் என்பார் பெப்சி என்பார்
பதநீரீன் அருமை அறியாதோர்
செர்ரி என்பார் பேரிக்காய் என்பார்
நுங்கின் அருமை அறியாதவர்
ஆப்பிள் என்பார் அன்னாசி என்பார்
மாம்பழத்தின் சுவை அறியாதவர்
ஏசி என்பார் ரிசார்ட் என்பார்
மாந்தோப்பின் குளுமை அறியாதவர்
நீச்சல் குளம் என்பார் ஷவர் குளியல் என்பார்
கரைபுரண்டு ஓடும் ஆற்றில் குளிக்காதவர்
அவனைப் பார் இவனைப் பார் என்பர்
தன் திறமையை அறியாதவர்
டிவி சீரியல் என்பர் சினிமா என்பர்
மனைவியிடம் அன்புடன் பேசத் தெரியாதவர் #வெயில்
ℳsd இதயவன்
திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்
எதிர்கட்சிகள் விமர்சிக்கனும் னு நினைச்சாலே ED ரெய்டு விடுற நீங்க எப்ப கைவிடுவீங்க ?!
குருநாதா
நம்மட்ட இருந்து காணாம போயிட்டாங்களா போகட்டும் தேடி நேரத்த வீணாக்கக்கூடாது…
அடேய் நான் போலீஸ்காரன் டா…
அரசுப்பள்ளி கற்றுத் தருவதை விடவா அடுத்த பள்ளிகள் கற்றுத் தந்துவிடும்.!
😍😍😍 pic.twitter.com/Z1rGLsGEqx— டேனியப்பா (@minimeens) May 5, 2024
ச ப் பா ணி
கேட்டால் மட்டுமே தரவேண்டும் கடனும்,அறிவுரையும்
balebalu
உறவினர் திருமணத்தில் முதல் பந்தியில் சாப்பிட்டாலும் உடனே கிளம்ப முடியாது அடுத்தடுத்து சடங்குகள் இருக்கும்
தமிழக தேர்தலும் அது மாதிரி ஆகிட்டது
ஊருக்கு முன்னாடி முடிந்தாலும் ரிசல்ட் உடனே வராமல்
அடுத்த ஸ்டேட் நியூஸ் அப்டேட்டும் பார்க்க வேண்டி இருக்கு
ச ப் பா ணி
ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் நினைவு கூற வைக்கிறது
அடகு வைத்த நகைகள்
எனக்கொரு டவுட்டு!?
வருஷா வருஷம் தேர்ச்சி விகிதத்துல பொண்ணுங்களே அதிகம் வர்றாங்களே. இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது?
ஆண்களுக்கு விட்டு கொடுத்து போற மனசு அதிகம்னு தெரியுது..
மயக்குநன்
5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை பதவியில் அமர்த்த ‘இண்டியா’ கூட்டணி திட்டம்!- பிரதமர் மோடி.
அப்புறம் என்ன… ‘ஒரே நாடு, ஒரே பிரதமர்’ திட்டத்தை அறிவிச்சிட வேண்டியதானே..?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆப்
ஜெயக்குமார் தனசிங் மரணம் : போலீசிடம் வாக்குமூலம் கடிதம் கொடுத்த தங்கபாலு