“சொந்தக்காரங்க தொல்ல தாங்க முடியல” : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

என் தம்பி பிளஸ் டூ முடிச்சு ரிசல்டடுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தான். சரியா இன்னைக்கு காலைல ஒன்பதரை மணிக்கு ரிசல்ட் வெளியாச்சு.

வெளியூர்ல வேலை பாக்குற நான் என் தம்பி எவ்வளவு மார்க் எடுத்து இருக்கான்னு கேக்குறதுக்கு அவனுக்கு போன் போட்டேன்.

ADVERTISEMENT

போன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துச்சு… உடனே அம்மா நம்பருக்கு கூப்பிட்டேன்…

ஏன் மா தம்பி நம்பரு ஆஃப்ல இருக்கு… மார்க் ஏதும் கம்மியானு கேட்டேன்…

ADVERTISEMENT

அதெல்லாம் இல்லப்பா நல்ல மார்க் தான் எடுத்திருக்கான் அப்படின்னு சொன்னாங்க…

அப்புறம் ஏன் மா சுவிட்ச் ஆப் பண்ணி இருக்கான்னு கேட்டேன்…

ADVERTISEMENT

அது ஒண்ணும் இல்லப்பா, எவ்ளோ மார்க் எடுத்தாலும் இந்த சொந்தக் காரங்க, ஏன் மார்க் கம்மியாச்சு, இன்னும் அதிகம் எடுத்திருக்கலாம் … அப்படி இப்படின்னு எதாவது சொல்லுவாங்க…

அதனால போன ஆஃப் பண்ணிட்டு ஃபிரண்ட்ஸ் கூட போயிட்டானு சொன்னாங்க…

சரிதானு சொல்லிட்டு    நான் போன வச்சிட்டென்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
பிரச்சனையை ரொம்ப நேரம் யோசித்து பார்த்தேன் மாமா!
என்ன முடிவு எடுத்த மாப்ள?
யோசிக்கிறதுதான் பிரச்சனைக்கே காரணம்னு இனி யோசிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் மாமா…

மயக்குநன்
இந்தியாவின் எதிர்காலமே நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்து இருக்கிறது!- செல்வப்பெருந்தகை.
‘இ.ண்.டி.யா.வின்’ எதிர்காலமும்தான்..!

குருநாதா
+2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை
எல்லாம் மாறிருச்சு, இது மட்டும் இன்னும் மாறவே இல்ல

May be an image of ‎2 people and ‎text that says "‎ரிச்ல்ட்டு வந்துடுச்சி போயி ஆர்ட்ஸ் & டீச்சருக்கு படிக்குறனு வேஸ்ட் பண்ணாத போயி ஜடிஐ படி முடிச்சவுடனே ஏதாவது ஒரு வேல கிடைக்கும்.... சேகர் G م மீம்ஸ் சே் மீ OPMACHER PNACHEROPFROLL IA AGHER ር OFFICIA OF hiitand 0m அப்படியா சரிங்கன்னே...‎"‎‎

Mannar & company
வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சினைகளை சிரிச்சிக்கிட்டே பேசினா அதுதான்
“நீயா நானா”,
அதையே சீரியஸா பேசினா அதுதான்
“சொல்வதெல்லாம் உண்மை”

ச ப் பா ணி
எலக்சனுக்காக வெயிட் பன்னுவதும்..
எலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட் பன்னுவதும் வேறுவேறு மனநிலைகள்

தர்மஅடி தர்மலிங்கம்
“டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும் என விமர்சித்தனர்” – பிரதமர் மோடி!
அதான்.. வடையா சுட்டுத் தள்ளிட்டீங்களோ ஜி.?!

மயக்குநன்
தமிழ் சினிமாவில் இன்னமும் ‘கட்டப் பஞ்சாயத்து’ நடந்து கொண்டுதான் இருக்கிறது!- நடிகர் விஷால்.
நடிகர் சங்க ‘கட்டிடப்’ பஞ்சாயத்தும் ரொம்ப நாளா நடந்துக்கிட்டுதான் இருக்கு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

குபேரா : தனுஷ் எடுத்த ரிஸ்க்.. 10 மணி நேர படப்பிடிப்பு..!

தந்தை இறந்த சோகத்திலும் 514 மதிப்பெண் பெற்ற மாணவி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share