“என்னது ரேஷன்ல கோதுமை பீரா?”: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

அடிக்கிற வெயில்ல மதியம் கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம்னு கடைக்கு போனேன்… போற வழியில நம்ம ஊர் ரேஷன் கடையில ஒரே சத்தமா இருந்துச்சு….

பக்கத்துல போய் அங்க இருந்த நம்ம அண்ணன்கிட்ட என்னண்ணா சத்தம்னு கேட்டேன்…

ADVERTISEMENT

அது ஒன்னுமில்லை தம்பி, இனி கோதுமை பீர் விற்கப்படும் சொல்லிருக்காங்கள,

அதுக்குதான் இந்த’குடிமகன்’ ரேஷன் கடைல வந்து கோதுமை பீர் கேட்டுக்கிட்டு இருக்காருனு சொன்னாரு…

ADVERTISEMENT

நீங்க சொல்றதா கேட்டா… அடிக்கிற வெயில நமக்கு இன்னும் தலைய சுத்துனு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

Kirachand
அமேதியில் ராகுலை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்! – வயநாட்டில் எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ ஆனி ராஜா
அது நாற வாய்! இது வேற வாய்!

வசந்த்
நாய்கள் எந்த வீட்டு வாசலில் நிற்கிறதோ அந்த வீட்டில் அன்று “கறி நாள்”

Mannar & company
கோடைக்காலத்தில் எல்லா நாட்களும் ‘SUN’day தான்!!
வெயில்

ச ப் பா ணி
இயற்கை ஆர்வலர்கள் அதிகமாயிட்டாங்க..
செயற்பாட்டாளர்கள் தான் குறைஞ்சிட்டாங்க

Writer SJB
செயற்கை மழையை பெய்ய வைத்தாவது தமிழ்நாட்டில் தாமரையை மலர வைப்போம்- தமிழிசை சௌந்தர்ராஜன்
ஊட்டியில் நிலவிய அதிகபட்ச வெப்பத்தால் ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த மொத்த சிசிடிவி கேமராக்களும் பழுதடைந்தன
இரண்டும் தனித்தனி செய்திகள் ஆனால்..????

Kannan Jeevanantham / JK
எல்லாரும் ஊட்டிக்கா போறீங்க
இந்தாங்க 5 டிகிரி அதிகம்
இனிமே யாரும் ஊட்டிக்கு போக கூடாது.

Sankar Ndt
ரேஷன் கடையிலே ஏழைங்க பசியாற கோதுமை கொடுங்கடான்னா !
டாஸ்மாக்ல கோதுமை பீர் கொடுக்கிறானுக !
கேட்டா இதுதாண்டா திரவிட மாடல் ன்னு சொல்லுவானுக !

கிராமத்தான்
பசிக்கு?
கோதுமை சப்பாத்தி

சுவைக்கு?
கோதுமை அல்வா

தெம்புக்கு?
கோதுமை களி

புத்துணர்ச்சிக்கு?
கோதுமை பீர்

லாக் ஆஃப்

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு ரெடி!

ஐபிஎல் 2024: குஜராத்தை அசால்டாக தட்டி தூக்கிய RCB

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share