அடிக்கிற வெயில்ல ஆபீஸ்ல டீக்கு பதிலா மோர்தான் குடுக்குறாங்க. அந்த நிவாரணம் போதாதுனு பக்கத்து கடையில போய் ஜுஸ் குடிச்சிக்கிட்டிருந்தோம்.
அப்ப நம்ம நண்பர் திருச்சிலேர்ந்து போன் பண்ணார். ‘என்ன நண்பா… அங்க வெயில்லாம் எப்படி இருக்கு?னு கேட்டேன். மக்கள் ரொம்ப கொந்தளிச்சு போயிருக்காங்கண்ணே…. மழை வெள்ளம் வந்தாதான் நிவாரணம் கொடுப்பாங்களா… வெயில்ல வெடிச்சுக் கெடக்கோம்… இப்ப ரேசன் கார்டுக்கு ஒரு நாலாயிரம் ரூபாய் போட்டுவிட்ட சொல்லுங்கண்ணே… அப்படின்னாரு.
இதைக் கேட்டு… நான் குடிச்சுக்கிட்டுருந்த ஜூஸே சூடாயிடுச்சு… என்னது வெயில் நிவாரணமா? ஆத்தி இது புது காம்பினேஷனாவுல்ல இருக்கு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
balebalu
செயலியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வாக்கு சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி – தலைமை தேர்தல் அதிகாரி
செயல்பட்ட செயலியும் செயல்படாத அதிகாரிகளும்
ℳsd இதயவன்
நாட்டின் செல்வத்தை எல்லாம் முஸ்லீம்களுக்கு தருவோம் என்கிறது காங்கிரஸ்~பிரதமர் மோடி
அதானி அம்பானிகளுக்கு தருவோம் னு சொல்லி இருந்தா ஃபயர் விட்டுருபீங்கல்ல ஜி?!
வசந்த்
இப்ப இருக்க நிலைமைல டைம் லூப்ல மாட்டிக்கொண்டாது சூரியன் அது கிட்ட வசமா மாட்டிக்கொண்டாது நாம.
ச ப் பா ணி
அன் லிமிட்டெட் மீல்ஸ் வாங்கினா லிமிட்டா சாப்பிடுவதும்..
லிமிட்டெட் மீல்ஸ் வாங்கினால் அன் லிமிட்டேட் அளவு சாப்பிட பசிப்பதும் டிசைன்
ℳsd இதயவன்
டேய் ஏப்ரல் உன்னால ஒரே ஒரு லாபம் மட்டும்தான்டா..
பகலோ ராத்திரியோ துணிய துவைச்சிட்டு இருக்கும் போதே காய்ஞ்சிருது..
amudu
மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் நமக்கு இருக்கும் நோய்களுக்கு மட்டும் பரிசோதனைகள் செய்யச் சொல்லாமல், அங்குள்ள மருத்துவ உபகரணங்களிலெல்லாம் பரிசோதனை செய்யச் சொல்லுவார்கள்.
Kirachand
தமிழ்நாட்டுல வெப்ப அலை வீசுதாம்… வெளிய போகாத மாப்ள!
அதுல ஒரு சிக்கல் மாமா!
என்ன மாப்ள? வீட்டுல அதைவிட வெப்ப அலை வீசும் மாமா!
balebalu
வண்டி இல்லாததால் சைக்கிளில் போனேன் – நடிகர் விஷால்
புரிஞ்சு போச்சு பின்னாடி வேட்பு மனு தாக்கலின்போது சொந்த கார் இல்லை ன்னு சொல்லணும்
அதுக்கு ஒத்திகை தான இது
ச ப் பா ணி
உடன் பணியாற்றுவொர் வீட்ல இருந்து மோர்,ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கும் போது…
ச்சே என்ன மனுஷன் யா…
கடைநிலை ஊழியன்
பேசாம.. வாக்கு சதவீதத்துல குழப்பம் இருக்குறதுனால..
எங்க தொகுதில மட்டும், மறுவாக்குப்பதிவு னு சொல்லி நாளைக்கு லீவ் கேட்டு பாக்கலாமா..
மயக்குநன்
2026-ல் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி பாமக தலைமையில் அமையும்!- அன்புமணி.
ஏன்… தைலாபுரத்தை தனிமாநிலமா அறிவிக்கச் சொல்லப் போறீங்களா பாஸ்..?!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
Comments are closed.