தளபதிய விட தலவிதி முக்கியம் பிகிலே : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

டீக்கடையில இன்னைக்கு வந்த பேப்பர்ல, சென்னையில் வாக்குசதவீதம் குறைவுனு போட்ருந்தாங்க..

இத பத்தி யோசிச்சிட்டு இருந்தப்போ, அந்த நேரம்பாத்து சென்னை குடிமகன் செண்பகம் பக்கத்துல வந்து உட்காந்தான். ‘நேத்து ஓட்டு போட வரவே இல்லையே’னு கேட்டதுக்கு.. ’ஆமா வரல’னு அசால்ட்டா பதில் சொல்றான்.

சரி இப்போ எங்க போறேனு கேட்டதுக்கு, ’20 வருஷம் கழிச்சி  கில்லிய இன்னைக்கு ரீரிலிஸ் பண்ணிருக்காங்க, அதான் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோக்கு போறேன்’னு சொல்லிட்டு கெளம்பிட்டான்.

படத்துல நடிக்குற நடிகருங்க, எத்தனையோ பேரு, முதல் ஆளா வந்து நேத்து ஓட்டு போட்டாங்க… ஆனா பாருங்க  பலபேரு கடைசி ஆளா கூட ஓட்டு போட வரல

20 வருஷத்துக்கு அப்புறம் ரீலிசாகுற தளபதி படத்த விட, அடுத்த 5 வருஷத்துல நம்ம தலவிதிய நிர்ணையிக்குற தேர்தல் ரொம்ப முக்கியம் தானே…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

 

வசந்த்
தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன
டேய் பாதி பேர் இன்னும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல தான் டா நிற்கிறான்.

balebalu
மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம் – நிர்மலா சீதாராமன்
SBI நவ் : ஐயோ அம்மா கோர்ட் ல அடிவாங்க நாங்க தயாரா இல்ல

ℳsd இதயவன்
பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும்; அதிமுக தொண்டன் வர மாட்டான் ~ செல்லூர் ராஜூ!
ஆமா ஆமா தெர்மோகோல் தான் இவரை தேடி போகும்?!

balebalu
சேர்ந்தே இருப்பது எதுவோ
சென்னையும் குறைந்த வாக்கு பதிவும்
Elections2024

குருநாதா
ஓட்டு போட வந்தா..
one month unlimited data package னு சொல்லிப்பாருங்க.. ஒருத்தன் வீட்ல இருக்க மாட்டான்
ஐடியா இல்லாத பசங்க

நெல்லை அண்ணாச்சி
திமுக.,.காங்கிரஸ்..பாஜக
next….? vote4INDIA…குஷ்பு

Mannar & company
தேர்தல், கிரிக்கெட் இரண்டும் ஒண்ணுதான்..
அது பார்க்கும்போது ஜாலியாருக்கும், நல்லாருக்கும். ஆனா யார் ஜெயிச்சாலும் நமக்கு ஒண்ணும் கிடைக்கபோறதில்லை!

நெல்லை அண்ணாச்சி
தனது தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது –
அண்ணாமலை – பாஜக
#என்னம்மா அங்க சத்தம்..? …,.” NOTA ” ..!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

வேட்டையாடிய புலி… கண்முன்னே குட்டியை பறிகொடுத்த தாய் யானை!

Kalavani: படத்துல வந்த குட்டி பொண்ணா இது?… ரசிகர்கள் ஆச்சரியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share