பாரபட்சம்னா என்ன தெரியுமா? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

டீக்கடைக்கு வந்த செல்வராசு, “அண்ணே இந்த டீக்கடக்காரரு.. எப்போ பாத்தாலும், உனக்கு பிளாஸ்டிக் டம்ளர்லயும், எனக்கு கண்ணாடி டம்ளர்லயும் டீ கொடுத்து பாரபட்சம் காட்டுறாரு… கஷ்டமா இருக்குண்ணே”னு காதுக்கிட்ட வந்து மெதுவா புலம்புனான்.

”ராசு… இதெல்லாம் ஒரு மேட்டரா? நான் தான் கப்புல கொடுங்கனு கேட்டேன்… சரி டீ கப்புல இருக்குற பாரபட்சத்த விட நாட்டுல நடக்குற பாரபட்சம் தாண்டா எனக்கு கஷ்டமா இருக்கு”னு சொன்னேன்.

என்ன விஷயம்னு அவன் கேட்க, அதுக்கு நான் “இன்னைக்கு பிரச்சாரத்துல மதத்த தொடர்புபடுத்தி பேசிட்டாருனு, நாகலாந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கு.

ஆனா பாரு… பிரதமர் மோடி தொடங்கி… பாஜக காரங்க எல்லாரும் மதத்தை தொடர்புபடுத்தி தான் பிரச்சாரம் பண்றாங்க… அத பத்தி ஏதாச்சி கேக்குதா இந்த தேர்தல் ஆணையம்?

நேத்து கூட மசூதிய பாத்து அம்ப விட்டு அழிச்சிருவேனு ஒரு பாஜக வேட்பாளரோட வீடியோ வைரலா போகுது… ஆனா இப்போ வரை தேர்தல் ஆணையம் சைலண்ட் மோடுல தான் இருக்கு.. இது தாண்டா உண்மையான பாரபட்சம்”னு  சொன்னேன்..

அதுக்கு அவன், ’அப்போ தேர்தல் ஆணையத்துல பாஜக காராங்க வேல பாக்குறங்க போல’னு ஒரு ஊகத்துல சொல்லிட்டு கெளம்பிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
பாஜக ஆட்சியில் மொபைல்
ரீ சார்ஜ் கட்டணம் குறைவு! – பிரதமர் மோடி
அதான, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை குறைவுன்னு சொல்ல முடியுமா என்ன?

ச ப் பா ணி
காத்து வருதோ இல்லையோ
காத்து வர்ற மாதிரி சத்தம் மட்டும் வருது
-கோடைகால மின்விசிறி

ℳsd இதயவன்
உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது! அண்ணாமலை திட்டவட்டம்!~
எழுதுங்க தமிழ்நாட்டில் ஏற்கனவே நீட்டால் நிறைய உயிர்கள் போயிருக்கு னு எழுதி திருந்துங்க ?!

balebalu
வாக்காளர்களை கவர வேட்பாளரின் கடைசி யுக்தி
‘கண்ணீர் விட்டு அழுவது

பர்வீன் யூனுஸ்
தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் – எடப்பாடி பழனிச்சாமி # இது எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தெரியுமா?

ArulrajArun
ஒரு தொல்லை ஒழிஞ்சது மாமா
எது மாப்ள நீங்க வாங்குன EMI loan ha
EMI loan ha தேர்தல் பிரச்சாரம் மாமா

black cat
நாளைக்கு ஒரு குரூப் கெளம்பும்.
புதுசா கல்யாணம் பண்ணிட்டு அந்த டிரஸ்ஸோட ஜனநாயக கடமையாற்ற.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

மசூதியை நோக்கி அம்பு விட்டதால் சர்ச்சை : மன்னிப்பு கோரினார் பாஜக வேட்பாளர்!

துபாயில் பெரு வெள்ளம் : மேக விதைப்பு காரணமா? காலநிலை மாற்றம் காரணமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share