இன்னைக்கு டீக்கடைக்கு பால் இறக்க வந்த பால்காரர் பரமன் கிட்ட, “என்னயா இன்னும் 2 நாள் தான் இருக்கு… யாருக்கு ஓட்டு போடலாம்னு இருக்கேனு? கேட்டாரு டீக்கடைக்காரர்,
அதுக்கு பால்காரர், “இந்த காங்கிரஸ்க்கும்… பிஜேபிக்கும் என்ன வித்தியாசம்னு புரிஞ்சிக்க முடியல.. குழப்பமா இருக்கு”னு சொன்னாரு.
அதுக்கு டீக்கடக்கார், ”இங்க பாரு பரமா, உனக்கு புரியுற மாறி ஒரு விஷயம் சொல்றேன். நீ பால் வித்து சேத்த காசுல ஒரு ஆயிரம் ரூபாய உன் அக்கௌன்ட்ல போட்டு, அத ஒரு வருஷம் கழிச்சு எடுக்கும்போது 1,040 ரூபாயா வந்தா அது காங்கிரஸ் ஆட்சி..
அதே மாறி ஆயிரம் ரூபாய உன் அக்கௌன்ட் இருந்து ஒரு வருஷம் கழிச்சு, எடுக்க போகும்போது ’மைனஸ் 170 ரூபாய்’னு இருந்தா அது பிஜேபி ஆட்சி… இவ்ளோ தான் வித்தியாசம்” டீக்கடக்கார் சொல்ல..
பால்காரர் மொபைல “ உங்களது *** வங்கியின் எஸ்எம்எஸ் மற்றும் மினிமம் பேலன்ஸ் கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது”னு செய்தி வருது…
அத பாத்துட்டு…. ”இந்த ஆட்சி க்ளோஸ் ஆகுதோ… இல்லையோ… முதல்ல நா என்னோட அக்கெளன்ட க்ளோஸ் பண்ண போறேன்”னு ஓடுறாரு…
ம்ஹ்ம்ம் நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ℳsd இதயவன்
ஒரு டிவி சேனலில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?”
முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட சரத்குமார்~
விவாதம் எப்ப நைட் 2 மணிக்கா ன்னு கேளு ?!
குருநாதா
புது வருசம் பொறக்குது
புதுசு புதுசா பிரச்சனைய குடுக்குது
ரிப்பீட்டு…
பர்வீன் யூனுஸ்
திராவிட மாடலை கிண்டல் செய்யாதீர்! – கமல்ஹாசன்
#உங்கள மாதிரி கூட்டணியில் இல்லாதப்ப தான் கிண்டல் பண்ணனுமா?
கடைநிலை ஊழியன்
ஏன் இவ்ளோ வெயில் அடிக்குது னு தெரியுமா.. ?
தெரியல..
ரொம்ப சிம்பிள்.. ஏன்னா இது வெயில் காலம்..
balebalu
கிளி ஜோசியத்தின் லேட்டஸ்ட் வெர்சன் ????
AI ரோபோ
என்னுடைய வெற்றி வாய்ப்பை பற்றி AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோவிடம் கேட்ட போது அது கூறிய பதிலை கேளுங்கள்…#தாமரை மலர்ந்தே தீரும் !!
வேண்டும் மோடி!! மீண்டும் மோடி!! #வாக்களிப்பீர்_தாமரை_சின்னம் #அக்காவந்தாச்சு #drஅக்காவந்தாச்சு #தாமரைசின்னம் #Tamilisai4southchennai… pic.twitter.com/FqyKT7JpXC
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 15, 2024
மயக்குநன்
நாட்டில் எங்கும் ‘மோடி அலை’ வீசவில்லை!- கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
ஆமாமா… ‘ஈ.டி. அலை’தான் வீசுது..!
குருநாதா
ஸ்கூல்ல காலைல அடிக்கிற அதே பெல் தான் டா
சாயங்காலமும் அடிக்கிது..
ஆனா சாயங்கால பெல்லு தர்ற சந்தோஷத்த காலைல அடிக்கிற பெல்லால தரமுடியாது..
கோழியின் கிறுக்கல்!
சூரியனுக்கு 24 hours duty போட்டு விட்டாங்க போல!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?
பழனிசாமிதான் ’நம்பர் ஒன்’ – எதில் தெரியுமா?: ஸ்டாலின் தாக்கு!