பத்தவச்சிட்டாரு டீக்கடக்காரரு : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

பொழுது போகலனு இன்னைக்கு சாயங்காலம் டீக்கடைக்கு பக்கமா போனேன். அங்க தேர்தல்ல போட்டியிடுற அதிமுகவோட முத்தரப்பும் மூனு பக்கமா நின்னு டீக்குடிச்சிட்டு இருந்தாங்க..

அந்த நேரம் பாத்து எடப்பாடி பொள்ளாச்சில பிரச்சாரம் பண்ண வீடியோ டிவில ஓடிட்டிட்டு இருந்துச்சி.

ADVERTISEMENT

அதுல ”அதிமுக மேல திமுக போட்ட  தடைகள் எல்லாத்தையும் தூள் தூளா எறிஞ்சிட்டோம்… இந்த தேர்தல எதிரிகள ஓட ஓட விரட்டுவோம்னு எடப்பாடி ஆவேசமா கடகடன்னு பேசிட்டு இருந்தாரு..

இத கேட்ட டீக்கடக்காரரு, “என்னது தூள், தூளாவா, அதிமுகவே இங்க இபிஎஸு, ஓபிஎஸு, தினகரன் சசிகலானு நாலா பிரிஞ்சி நார் நாரா கெடக்கு.. இதுல எங்க தூள் தூளா?”னு படார்னு கேட்டுபுட்டாரு…

ADVERTISEMENT

டீக்கடக்கார் கேட்ட கேள்விய கேட்ட முத்தரப்பும், படபடனு திரும்ப, ’ஆகா இதுக்கு மேல இங்க இருந்தா சரிப்படாது’னு தடதடனு அங்கே இருந்து கெளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ADVERTISEMENT

நெல்லை அண்ணாச்சி

செய்தி ~ திருமாவளவன் வீட்டில் IT…ரெய்டு.

மீ ~ next…நயினார் நாகேந்திரன் தானே..!

ஐடி ~ இருக்கும் ஆனா இல்ல

ℳsd இதயவன்
ராமா் கோயில் கட்டுவதை தடுக்க முயன்றது காங்கிரஸ்: பிரதமா் மோடி
நல்லவேளை என்னோட உதவியோடு னு சொல்லலை ~ நேரு ?

பர்வீன் யூனுஸ்
ஆயிரம் மோடி வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது – வைகோ
# நீங்க மதிமுகவை ஆரம்பிச்சி திமுகவை அழிக்க முடியாம போச்சே.. அது மாதிரியா?

balebalu
தேர்தல் நேரத்தில்
‘பிரச்சாரத்துக்கு வாங்க’ என்று சிலரையும்
‘தயவு செய்து பிரச்சாரத்திற்கு வர வேண்டாம்’ ன்னு சிலரையும்
கட்சிகள் பிரித்து வைக்கின்றன

ச ப் பா ணி
தான்மட்டும் தனியாக செய்யும் தவறுகளை ‘தனிமனித சுதந்திரம்’ என எண்ணிக் கொள்கிறார்கள்

வசந்த்
“பிரதமர் மோடி பரிசுத்தமானவர், துரும்பு அளவுக்கு கூட தவறு செய்யாதவர்”- ராமதாஸ்
கூட்டணி தர்மமா?
ஏதே… ஆமா அதுக்கு என்ன இப்ப?

கோழியின் கிறுக்கல்
‘கடவுள் நம்மை காப்பாற்றுவார் வாங்க’ன்னு கூப்பிடுறாங்க,
சிறிது நாட்கள் கழித்து ‘கடவுளை நாம் தான் காப்பாற்றணும் வாங்க’ன்னு கூப்பிடுறாங்க!!

ச ப் பா ணி
இன்னும் “வெயிலைக் குறைப்போம்”னு மட்டும் தான் தேர்தல் வாக்குறுதி தரல

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: ரோடு ஷோ- ஆளுநர் மாளிகையில் வெளிப்பட்ட மோடியின் நிஜ ரியாக்‌ஷன்!

ஊழல் யூனிவர்சிட்டியின் வேந்தர் மோடி : ஸ்டாலின் அட்டாக்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share