தேர்தல் வந்தாலும் வந்துச்சு. எதைப் பார்த்தாலும் அரசியலாவே பார்க்க வச்சிடறாங்க. டிவில அண்ணாமலை பேட்டி கொடுத்துட்டு இருக்காரு. அதுக்கு கீழ நியூஸ் அப்டேட்ல மயிலாடுதுறையில் சிறுத்தை ஆட்டை கடிச்சிருச்சுன்னு நியூஸ் போடுறாங்க. இதைப் பாத்துட்டு ஆபீஸ்ல எப்படி கோர்த்து விடுறாங்க பாரு அப்படின்னு சொல்றாங்க.
ஆடு, சிறுத்தை எல்லாம் அரசியலா போச்சு
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ArulrajArun
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்” காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – செய்தி
ஆத்தாடி இது அதுல ..ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்குகளிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் பிரதமர் நரேந்திர மோடி
அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளா…
மாமா.. நீங்க கொடுத்துட்டு இருக்கிறது சத்து டானிக்கு…#annamalaiBJP#Annamalai4Covai pic.twitter.com/v4ghnp8t7b
— KIRUBA SHIVA (@Siva_gym) April 7, 2024
பர்வீன் யூனுஸ்
பாஜக கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒரே கொள்கை – பாரிவேந்தர் # 5 வருஷத்துக்கு முன்னாடி உங்க கொள்கையும் திமுக கொள்கையும் ஒண்ணா இருந்த மாதிரியா?
ArulrajArun
இஸ்லாமியர்களின் உரிமையை மீட்போம் – அன்புமணி
எது பிஜேபி க்கூட கூட்டணி வச்சுக்கிட்டா
பர்வீன் யூனுஸ்
இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் – கங்கனா ரனாவத் # நல்ல வேளை..நாதுராம் கோட்ஸேனு சொல்லாம போனீங்களே!
எந்த சத்தமும் இல்லாமல் எடப்பாடி சோழியை அண்ணாமலை முடித்து வருகிறார் 🤭 இலைக்கு மேல தாமரையை வரைந்து கனைக்சன் கொடுத்து விட்டானுக
பாதம் தாங்கி பழனிச்சாமி என்னய்யா இது ?? pic.twitter.com/xsTybmHzgS
— கபிலன் (@_kabilans) April 6, 2024
ச ப் பா ணி
மது அருந்தாத நண்பனை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போறதே.. நம்மை எல்லாரையும் அள்ளிப்போட்டு பாதுகாப்பாக கூட்டிவரத்தான்
mohanram.ko
பூமி சுற்றாமல் நின்னா கூட வாழ்ந்திடலாம்
ஆனா, இந்த ஃபேன் ஒரு நிமிஷம் நின்னா வாழவே முடியாது
balebalu
வெய்யில் கொளுத்தினாலும் எப்படியோ சமாளிச்சு பிரச்சாரத்திற்கு போயிடுவாங்க
இனிமே நல்ல மழை காலத்தில் எலெக்க்ஷன் வெச்சா தான்
ரோடு நிலைமை , மக்கள் படும் அவஸ்தை ஆட்சியாளர்களுக்கு புரியும்
குருநாதா
இருக்குற மரத்த எல்லாம் வெட்டி ப்ளாட் போட்டு வித்துட்டு
வெயில் கொளுத்துதுனு பொலம்புறானுக
: மண்ட கோளாறு பிடிச்ச பயலுக
ℳsd இதயவன்
கெஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை எடுத்துத் தர அமலாக்கத் துறைக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு~
Apple ~ ஐ போன் வேணும்னா தர்றோம் தகவலெல்லாம் இல்ல ?!
கோழியின் கிறுக்கல்!!
பேசுவதற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்,
கேட்பதற்கு தான் கிடைப்பதில்லை!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
Comments are closed.